Vice District Governors

Lions Clubs District 324 B2 First Vice Governor

நட்புக்கு முதல் மரியாதையும், வார்த்தைகளுக்கு மதிப்பும் கொடுப்பவர். பொய்மை இவருக்கு வசப்படாதவை. நேர்பட பேசி நல் நெஞ்சங்களின் அன்பை பெற்றவர். நெஞ்சம் நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையோடு மாவட்டத்தை வலம் வந்து கொண்டிருக்கும் நட்பின் இலக்கணம். தடைகளைத்தாண்டி சாதனைச் சுவடுகளை ஆழமாக பதித்து வருபவர். அரிமா மாவட்டத்தில் ஒர் சூறாவளி போல் சுற்றி சுற்றி வலம் வருபவர். நட்புக்கு முதல் மரியாதையும், வார்த்தைகளுக்கு மதிப்பும் கொடுப்பவர். நெஞ்சம் நிமிர்த்தி நேர்கொண்ட பார்வையோடு மாவட்டத்தை வலம் வந்து கொண்டிருக்கும் நட்பின் இலக்கணம்.

இவர் பிறந்தது சீர்மிகு செல்லம் நிறைந்த சிவகங்கை சீமையில், கொல்லங்குடியை அடுத்த அழகாபுரி, புகழோடு வாழும் தியாகராஜன், மீனாட்சியம்மா அவர்களின் ஒரே ஆண் வாரிசு. தன் வாழ்க்கையில் சரித்திரம் படைக்க வேண்டும் என்பதற்காகவே இவர் படித்தது பி.ஏ. சரித்திரம். கொண்ட குலத்தின் குணம் மாறாமல் இவர் ஆதியில் செய்த தொழில், நிதி நிறுவனம். பின் கட்டுமான தொழிலில் கால் பதித்து அதில் தனி முத்திரையை பதித்து வருபவர்.

ஈகை குணத்தோடு இறை தொண்டும் சேர்ந்ததினால் இவர் மூலம் பயன் பெற்றன பல கோயில்கள். கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஓசூர் சோமேஷ்வரர் ஆலயத்தின் அன்னதான குழு தலைவர், ஓசூர் உத்தனபள்ளி அகரம் முருகன் கோவில் அன்னதான குழு உறுப்பினர். கூடைபந்து விளையாட்டு வீரர் ஆன இவர், ஓசூர் SNA Sports Clubன் பொருளர் என பொது வாழ்வில் தடம் பதித்து வருபவர். அந்த நீட்சி தான் அரிமா இயக்கத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் ஓசூர் இம்பேக்ட் அரிமா சங்கத்தில் தன்னை இணைத்துகொண்டது முதல் இன்று வரை தன் சேவை மூலம் மாவட்டத்தின் பார்வையை தன் மேல் பதிக்கு செய்தவர்.

சங்க தலைவராக பதவி வகித்த ஆண்டில் சங்க அறக்கட்டளையை துவக்கி அதன் பொருளராக பொறுப்பேற்று சங்கத்திற்காக ரூபாய் முப்பது லட்சம் மதிப்பில் இடம் வாங்கப்பட்டதும், நமது ஏற்காடு தலைமைப்பண்பு அறக்கட்டளை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டதும் இவரது இயக்க ஈடுபாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு. இயக்குநர், செயலர், தலைவர் என சங்கு அளவிலும், LCIF மாவட்டத் தலைவர், வட்டாரத் தலைவர், மண்டலத் தலைவர், GLT மாவட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பதவியேற்பு விழா பதிவுக்குழுத் தலைவர் என பல பதவிகளின் மூலம் தன்னை உயர்த்திக் கொண்டவர். இன்று மாவட்ட கண்ணொளித்திட்டத் தலைவராய் உங்களோடு வலம் வருபவர்.

2015 ம் ஆண்டு ஊட்டியில் நடைபெற்ற பயிற்றுனர்களுக்கான பயிற்சி பயிலரங்கிலும் ( TTW ), கொடைக்கானலில் நடைபெற்ற கூட்டு மாவட்ட தலைமைப்பண்பு பயிலரங்கிலும் ( RLLI ) , 2017 ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற மூத்த அரிமா உறுப்பினர்களுக்கான தலைமைப்பண்பு பயிலரங்கிலும் ( ALLI ), பங்குகொண்டு பட்டம் பெற்று தன் தலைமைத்திறனை மெருகேற்றிக் கொண்டவர் வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் திருமதி. R. வள்ளியம்மை, இவர்கள் கண்டெடுத்த முத்துக்கள் மகள் சரண்யா ஜெயந்தன் M.E., மகள் வள்ளிமீனா B.Tech., மருமகன் ஜெயந்தன் M.E., மற்றம் பேரன் சஞ்சீவ்.

அரிமா T.ரவிவர்மா PMJF

முதலாம் துணை மாவட்ட ஆளுநர்

ஓசூர் இம்பாக்ட் அரிமா சங்கம்

Lions Clubs District 324 B2 Second Vice Governor

உருவமற்ற ஒரு பொருள் உலகத்தை ஆள்கிறது என்றால் அது அன்பு தான் என்று அரிமாக்களை நேசிப்பவர் இவர். புன்னகையே இவரின் பொது மொழி.பாரி மலை சாரலிலே தென்றலோடு தமிழும் ஆண்மிகமும் தழுவும் வேந்தன்பட்டியில் கருப்பையா ஏகம்மை பெற்றேடுத்த முத்தான வாரிசு.

ஈந்து உவக்கும் இன்பம் அறிந்த அரிமா பேரியக்கத்தில் 1994 ஆம் ஆண்டு தன்னை ஈடுபடுத்தி 1998-99 ஆம் ஆண்டின் தலைவராய் பயணித்தபோது அரசு பள்ளி மாணவர்கள் 8000 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்து 496 மாணவ மாணவியருக்கு கண் கண்ணாடி வழங்கி தொண்டில் தடம்பதித்தார்.

6 முறை மாவட்ட தலைவர்,வட்டார தலைவர் , மண்டலத்தலைவர் , மாவட்ட இணை பொருளர்,மாவட்ட இணை செயலர் , உலகளாவிய உறுப்பினர் குழு ஒருங்கிணைப்பாளர் (GMT) 3 ஆண்டுகள், மாவட்ட நிர்வாக அதிகாரி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என தொடர்ந்து 15 ஆண்டுகள் இடைவிடாத அயராத அரிமா பயணம் இவரது இயக்கப்பட்றையும் தலைமைத்திறனையும் எடுத்துக்காட்டுகிறது.

3 ஆண்டுகள் மாவட்ட உறுப்பினர் பெருக்க ஒருங்கிணைப்பாளராக (GMT) உழைப்பை நல்கியதோடு உறுப்பினர் பெருக்கத்திற்காக வெள்ளி காசை அள்ளி கொடுத்தவர் . மிகவும் கடுமையான பணியான மாவட்ட கையேட்டு குழு தலைவராய் இரண்டாண்டுகள் பயணித்து பல லட்சங்களை மாவட்டத்திற்க்கு ஈட்டி கொடுத்தவர் . மாவட்ட பதவியேற்ப்பு விழாவிலேயே மாவட்ட கையேட்டினை முழுமையாக நிறைவு செய்து அச்சிட்டு வழங்கியவர்.

பதித்த முத்திரையின் விளைவாக பன்னாட்டு தலைவரின் பாராட்டு சான்றிதழ் 3 முறை,பன்னாட்டு வழிகாட்டி அரிமா சான்றிதழ்2 முறை,பன்னாட்டு அளவில் சிறந்த மண்டலத்தலைவர் விருது,கூட்டு மாவட்ட GMT ஊக்க விருது, சிறந்த வட்டார தலைவர் விருது, மாவட்ட ஆளுநரின் ஊக்க சான்றிதழ், கூட்டாண்மை சமூக பொறுப்பிற்கான பங்களிப்பு விருது, மாவட்டத்தின் தலைசிறந்த அரிமா விருது 3 முறை,தலை சிறந்த மாவட்ட தலைவர் விருது ,மாவட்ட பயிற்றுநர் சான்றிதழ் 2 முறை, மாவட்ட ஆட்சியரின் கண்ணொளி காவலர் விருது என குவிந்த விருதுகள் ஏராளம்.

2014-ல் மாவட்ட அளவில் ஊட்டியில் நடைபெற்ற பயிற்றுநர் பயிற்ச்சி(TTW) பட்டறையிலும்,2016-ல் கூட்டு மாவட்ட அளவில் சென்னையில் நடைபெற்ற பயிற்றுநர் பயிற்சி பட்டறையிலும்,2013-ல் கொடைக்கானலில் நடைபெற்ற மண்டல அளவிலான தலைமைப்பண்பு (RLLI) பயிலரங்கிலும், 2017-ல் நேபாலில் நடைபெற்ற முதன்மை தலைமைப்பண்பு (ALLI) பயிலரங்கிலும் பங்கு பெற்று பட்டயம் பெற்றவர்.இன்று வரை 250-க்கும் மேற்பட்ட இயக்க அறிமுக பயிற்சியும் 100-க்கும் மேற்பட்ட தலைமை பண்பு மற்றும் சங்க மேம்பாட்டு பயிற்சியும் சிறப்பாக வழங்கி வருபவர்.

தந்தை வழியில் தோல் தொழிலில் தானும் ஈடுபட்டு 30 ஆண்டு கால இமை சோரா உழைப்பால் உயர்ந்தவர். தனக்கென தொழிலில் ஒரு இடத்தை தக்கவைத்திருப்பவர்.

ஆன்மிகம் கலந்த வாழ்வு அமைதியின் கொள்ளிடம் என்பதால் அப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு புகழ் பெற்ற வைரவன் கோவில் செயற்குழு உறுப்பினர், ஈரோடு ஐயப்பன் கோவில் செயற்குழு உறுப்பினர் , ரோஜா நகர் நலச்சங்கத்தின் செயலராய் பணி செய்து கிடப்பவர்.

பெண்மையை போற்றும் வண்ணம் தனது மனைவி அரிமா சாந்தி முத்தையாவையும் சிறந்த வட்டார தலைவராய்,சிறந்த மண்டலத்தலைவராய், விளங்க துணைநின்றவர்.இனிய இல்லறத்தின் இளவல் அரிமா விஸ்வநாத் மாவட்ட பயிற்றுநராய் வலம் வருகிறார்.மருமகள் அழகம்மை இல்லப்பணியோடு இயக்கப்பணியும் ஆற்றி வருபவர்.இவர்களையும் இணைத்து குடும்பத்துடன் இயக்கப் பணி ஆற்றுகின்ற நல் அரிமா.

ஆர்ப்பாட்டம் இல்ல அரிமா,அர்ப்பணிப்பு, பண்பட்ட பக்குவம், ஊக்கமுடன் ஊருக்கு உழைத்திடல், தொலைநோக்கு பார்வை, மகத்தான மானுட நேயம்,இவைகளின் இலக்கணம் எங்கள் ஈரோடு யூனிக் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர், நம்மில் ஒருவராய் நாளும் வலம் வரும் நட்பின் நாயகன் அரிமா KR.முத்தையா MJF அவர்களை 2020/2021 ஆம் ஆண்டின் இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் வேட்பாளராக முன்மொழிகிறோம்.

உங்களின் உயரிய வாக்குகளை உவகையோடு அள்ளித்தந்து உன்னத வெற்றிபெற உறுதுணையாய் நிற்க வேண்டுகிறோம்.

அரிமா KR.முத்தையா MJF

இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர்

ஈரோடு யூனிக் அரிமா சங்கம்

Address

33 / 16 B, Chinnamuthu 2nd Street, 2nd Floor, Trust Hospital Back Side, Perundurai Road, Erode, Tamilnadu, India - 638011

Email

lions324b22021@gmail.com