District Governor

இளம் அரிமாக்களின் கதாநாயகன், இடுக்கண் களைந்திடும் உன்னதத் தோழன், அன்பைத் தேடும் வேடன் ! தொண்டையும், தோழமையும் நெய்யும் நெசவாளி! உள்ளத்தில் நல்லன மட்டும் விதைக்கும் விவசாயி! "வாழ்தல் அறம்" என்றுணர்ந்த நல்அரிமா!!

சுழன்றாடி வருகிறது ஓர் பெரும்புயல், வார்தைகளை திட்டமிட்டு வடிவமைத்து வார்த்தெடுத்து வழங்குபவர் அல்ல, மனதில் பட்டதை மறைக்காமல் உறைத்திடும் வெளிபடைவாதி. உழைப்பு! உழைப்பு! உழைப்பு! இந்த மந்திரச் சொல் இவரது தாரக மந்திரம். படிக்கும் காலங்களிலேயே மாலை நேரங்களில் பகுதி நேர பணியாளராய் பணியாற்றியதே இதற்கு சான்று. இன்று! தொழிலதிபராய் உயர்வு பெற்று உச்சத்தை எட்டியதற்கு இதுவே மூலதனம்.

கணேஷ் கெமிக்கல்ஸின் பங்குதாரராய் தனது தொழில் வாழ்வை துவங்கி இன்று கிளாசிக் கெமிக்கல்ஸ் என்ற தொழிற்சாலையை கடந்த 23 ஆண்டுகளாய் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களிலும் வியாபாரத்தில் கோலோச்சி வரும் திறமையின் சிகரம் இவர்! இது மட்டுமல்லாமல் நிதி நிறுவனங்கள், மருத்துவமனை, Holiday Resorts பங்குதாரர்.

நேர்மையாக இரு, நேர்படப்பேசு, எதற்கும் அஞ்சேல் - இவரது வெற்றியின் சூத்திரங்கள், எந்த சூழ்நிலையிலும், எந்த இக்கட்டிலும்-முளைத்து, துளிர்த்து, செழித்து வளர முடியும் என்ற நம்பிக்கையுடன் சுயம்பு இவர்.

தியாகராஜன் - பிரேமா தம்பதியரின் மகனாய் பிறந்து கள்ளங்கபடமற்று துள்ளித்திரிந்த இவரது பள்ளிப்பருவம் ஶ்ரீரங்கம் கிழக்கு ரங்கா பள்ளியில் கழிந்தது. கனவுகளோடும், கற்பனைகளோடும் எதிர்கால சிந்தைகளோடும் கூடிய இவரது கல்லூரிப்படிப்பு பெங்களூரு டாக்டர் அம்பேத்கரர் கல்லூரியிலும், செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும் நடந்தேறியது. இவர் ஒரு இளங்கலை வணிகவியல் பட்டதாரி மட்டுமல்ல, கணிப்பொறியியல் முதுகலை பட்டதாரியும் கூட.

1998-ம் ஆண்டு அரிமா பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். ஈரோடு வடக்கு அரிமா சங்கத்தில் தொடங்கிய இவரது 22 ஆண்டு கால அரிமா பயணத்தில், இன்று வரை இவர் பதித்து வருவது வெற்றியின் சுவடுகளே! சிறந்த செயலர், தலைவர், மாவட்டத் தலைவர், வட்டாரத்தலைவர், மண்டலத்தலைவர், மாவட்ட இணைப்பொருளர், இணைச்செயலர் மாவட்ட கையேட்டுக் குழு தலைவர், மாவட்டப் பொருளர் என இவர் பெற்ற விருதுகள், இவர் வகித்த பதிவிகளுக்கு பெருமை சேர்த்துள்ளது. இளம் அரிமா சங்க மாவட்டத் தலைவராய் பணியாற்றி 2011-ம் ஆண்டு நமது மாவட்டத்தை உலக அளவில் இளம் அரிமா சங்க விரிவாக்கத்தில் மூன்றாம் இடத்திற்கு இட்டுச்சென்றது இவர் பெற்ற விருதுகளில் ஆகச்சிறந்தது ஆகும். சத்துணவுக்கூடம், 1000 தொழிலாளிகளுக்கு ஆயுள் காப்பீடு, 17 ஆண்டுகளாக கல்விக்கண்காட்சி! 5 - ஆம் வகுப்பு வரை பாடங்களிலும் கணினிமயம் என தனது தலைமைக் காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் அளப்பரியது, போற்றுவதற்க்குறியது.

இவரின் இல்வாழ்க்கை துணைவியாக அரிமா. E. சுகுணா அமைந்தது இறைவன் கொடுத்த வரம். இவரது வாழ்வின் முன்னேற்றத்துக்கெல்லாம் இவரே ஏணிப்படி, இவர்களது அன்பில் பூத்த புது மலர்கள் செல்வன் விக்னேஷ், செல்வி பவித்ரா.

ஆர்பரிக்கும் ஆழ்கடல், இளம் அரிமாக்களின் கதாநாயகன், இடுக்கண் களைந்திடும் உன்னதத்தோழன். அன்பைத் தேடும் வேடன்! தொண்டையும், தோழமையும் நெய்யும் நெசவாளி! உள்ளத்தில் நல்லன மட்டும் விதைக்கும் விவசாயி! "வாழ்தல் அறம்" என்றுணர்ந்த நல்அரிமா!!

கண்ணொளி மாவட்டத்தலைவராக இருந்தபொழுது 14000 - க்கும் மேற்பட்ட கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று 324 B2 2020 - 21 ஒளிமயமான ஆண்டின் மாவட்ட ஆளுநராக ஈரோடு வடக்கு அரிமா சங்கத்தைச் சேர்ந்த அரிமா. T. இளங்கோவன் MJF அவர்கள் உயர்ந்துள்ளார்.

Address

33 / 16 B, Chinnamuthu 2nd Street, 2nd Floor, Trust Hospital Back Side, Perundurai Road, Erode, Tamilnadu, India - 638011

Email

lions324b22021@gmail.com