About District 324 B2

மெல்வின் ஜோன்ஸ் என்பவரால் 1917 ஆம் ஆண்டு உலகின் முதல் அரிமா சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் முதலாவதாக மும்பையில் 03.02.1956 அன்றும், டில்லியில் 11.02.1956லும் துவக்கப்பட்டன. சென்னையில் 1957 - 58 ஆம் ஆண்டில் முதல் அரிமா சங்கம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் 1970 - 71 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் அரிமா ஆளுநர் N.V. இராஜரத்தினம் அவர்களின் பதவிக்காலத்தில் தமிழ்மொழி முதன் முறையாக அரிமா சங்கங்களில் பயன்படுத்தப்பட்டது.

இந்திய தேசத்தை முழுவதும் உள்ளடக்கிய 304 - வது கூட்டு மாவட்டம் 1973 - 74ல் 321, 322, 323, 324 என்று நான்கு கூட்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. நமது கூட்டு மாவட்டம் 324 ஆக செயல்படத் துவங்கியது. வருவாய் மாவட்டங்கள் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி ஆகியவை 324 - A ஆகவும், தமிழகத்தின் மீதமுள்ள வருவாய் மாவட்டங்கள் 324 - B என்றும், ஆந்திர மாநில சங்கங்கள் 324 - C என்றும், கர்நாடக மாநில சங்கங்கள் 324 - D ஆகவும், கேரள மாநில சங்கங்கள் 324 - E ஆகவும் பிரிக்கப்பட்டன.

புதிய 324 - B மாவட்டத்தின் முதல் ஆளுநராக 1973 - 74 ஆம் ஆண்டு பதவி வகித்தவர் அரிமா K. சின்னுசாமி MJF அவர்கள் பின்னர் இவர் கூட்டு மாவட்டம் 324 - ன் முதல் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய மாவட்டச் செயலாளர் அரிமா M. பெரியசாமி MJF அவர்கள்.

1975 - 1976

324 - B மாவட்ட ஆளுநராக சேலம் ஹோஸ்ட் அரிமா சங்கத்தின் அரிமா டாக்டர் J. சுகவனம் MJF அவர்கள் தேர்வு பெற்றார். இவர் பின்னர் கூட்டு மாவட்டத் தலைவராகவும் செயல்பட்டார்.

1984 - 1985

324 - B மாவட்ட ஆளுநராக ஈரோடு அரிமா சங்கத்தைச் சேர்ந்த அரிமா M. பெரியசாமி MJF அவர்கள் தேர்வு பெற்றார். இவருடைய மாவட்ட செயலாளர் அரிமா N. முத்துசுவாமி PMJF அவர்கள்.

1990 - 1991

முதல் 324 - B மாவட்டங்கள் 324 - B1, 324 - B2, 324 - B3, 324 - B4, என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன. 324 - B2 அரிமா மாவட்டத்தில் ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் (சில பகுதி), நாமக்கல் ஆகிய வருவாய் மாவட்ட சங்கங்கள் அடங்கும்.

324 - B2 அரிமா மாவட்டத்தின் முதல் ஆளுநராக ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவரும், முன்னாள் கூட்டு மாவட்டத் தலைவருமான அரிமா N. முத்துசுவாமி PMJF அவர்கள், 1990 - 91 ஆம் ஆண்டு மதுரை அரிமா மாநாட்டில் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் மாவட்டச் செயலராகப் பணியாற்றியவர் அரிமா M. சின்னையன் MJF அவர்கள்.

1991 - 1992

324 - B2 மாவட்ட ஆளுநராக பவானி கொமாரபாளையம் சங்கத்தின் அரிமா S.S.M. சவுண்டப்பன் MJF அவர்கள் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் அமைச்சரவை செயலராக அரிமா C. ஜெயக்குமார் PMJF அவர்கள் பணியாற்றினார். 324 கூட்டு மாவட்டத்தின் 1991 - 92 ஆண்டு கூட்டு மாவட்டத் தலைவராக அரிமா N. முத்துசுவாமி PMJF அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

சேலம் ஹோஸ்ட் சங்கத்தைச் சார்ந்த அரிமா துரை (எ) துரைசாமி MJF அவர்கள் சேலம் மாநாட்டில் 1992 - 93 ஆம் ஆண்டின் ஆளுநராக ஒரு மனதாக தேர்வு பெற்றார். இவரின் அமைச்சரவை செயலர் அரிமா V.S. வரதராஜன் அவர்கள்.

1993 - 1994

ஆளுநராக அரிமா C.ஜெயக்குமார் PMJF அவர்கள் சேலம் மாநாட்டில் ஒரு மனதாக தேர்வு பெற்றார். அமைச்சரவைச் செயலாளராக அரிமா ரமேஷ் R. லுல்லா MJF அவர்கள் பணியாற்றினார்.

1994 - 1995

ஆளுநராக கோபி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T.N. ரவிச்சந்திரன் MJF அவர்களும், துணை ஆளுநராக அரூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா M. மாசி MJF அவர்களும் தேர்வு பெற்றனர். அமைச்சரவைச் செயலராக அரிமா S.S. பழனிசாமி MJF அவர்கள் பணியாற்றினார்.

1995 - 1996

ஆளுநராக அரூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா M. மாசி MJF அவர்களும் துணை ஆளுநராக ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா M. சின்னையன் MJF அவர்களும், சேலம் மாநாட்டில் தேர்வு பெற்றனர். அரிமா N. தியாகராஜன் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

1996 - 1997

ஆளுநராக ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா M. சின்னையன் MJF அவர்களும், துணை ஆளுநராக ஈரோடு சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Y.S. மதிவாணன் PMJF அவர்களும், ஈரோடு மாவட்ட மாநாட்டில் தேர்வு பெற்றனர். அரிமா R. வெங்கடாசலம் அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

1997 - 1998

ஆளுநராக ஈரோடு சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Y.S. மதிவாணன் PMJF அவர்களும், துணை ஆளுநராக சத்தியமங்கலம் நகர அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா V. வைத்தீஸ்வரன் MJF அவர்களும் தேர்வு பெற்றனர். அரிமா Er. P.S. தங்கவேலு MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

1998 - 1999

ஆளுநராக சத்தியமங்கலம் நகர அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா V. வைத்தீஸ்வரன் MJF அவர்களும், துணை ஆளுநராக நாமக்கல் மலை நகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S.M.R. குமரேசன் MJF அவர்களும், ஈரோட்டில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா R.M. பழனிசாமி அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

1999 - 2000

ஆளுநராக நாமக்கல் மலை நகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S.M.R. குமரேசன் MJF அவர்களும், துணை ஆளுநராக சேலம் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S. பழனிவேலு PMJF அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா Dr. K. பெரியசாமி அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2000 - 2001

ஆளுநராக சேலம் மெல்வின் மெட்ரோ அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S. பழனிவேலு PMJF அவர்களும், துணை ஆளுநராக ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. K. தனபாலன் PMJF அவர்களும் போட்டியின்றி ஒரு மனதாக சேலம் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா Er. N. ராமராவ் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2000 - 2001

324 கூட்டு மாவட்டத் துணைத் தலைவராக முன்னாள் ஆளுநர் அரிமா SMR. குமரேசன் MJF அவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2001 - 2002

ஆளுநராக ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. K. தனபாலன் PMJF அவர்களும் துணை ஆளுநராக சேலம் பேர்லேண்ட்ஸ் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. K. P. மனோகரன் PMJF அவர்களும் சேலம் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா G. செந்தில் அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2002 - 2003

ஆளுநராக சேலம் பேர்லேண்ட்ஸ் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. K. P. மனோகரன் PMJF அவர்களும் துணை ஆளுநராக அவல்பூந்துறை அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. பிரணவமர்மன் MJF அவர்களும் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா Er. S.P. கந்தசாமி MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2003 - 2004

ஆளுநராக அவல்பூந்துறை அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. பிரணவமர்மன் MJF அவர்களும் துணை ஆளுநராக தர்மபுரி டவுன் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா D.N.V. செல்வராஜ் MJF அவர்களும் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா R. சம்பத் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார். கூட்டு மாவட்டத் தலைவராக அரிமா Er. K.P. மனோகரன் PMJF தேர்வு செயப்பட்டார்.

2004 - 2005

ஆளுநராக தர்மபுரி டவுன் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா D.N.V. செல்வராஜ் MJF அவர்களும், துணை ஆளுநராக ஈரோடு காவேரி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா ரமேஷ் R. லுல்லா MJF அவர்களும் ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா K. லோகநாத்சிங் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2005 - 2006

ஆளுநராக ஈரோடு காவேரி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா ரமேஷ் R. லுல்லா MJF அவர்களும், துணை ஆளுநராக அயோத்தியாப்பட்டணம் ரைஸ் சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T. காசிவிஸ்வநாதன் MJF அவர்களும் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா R. கல்யாணசுந்தரம் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2006 - 2007

ஆளுநராக அயோத்தியாப்பட்டணம் ரைஸ் சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T. காசிவிஸ்வநாதன் MJF அவர்களும், துணை ஆளுநராக ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா பூர்ணிமா டன்னா MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா S. மணி MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2007 - 2008

ஆளுநராக ஈரோடு நடுநகர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா பூர்ணிமா டன்னா MJF அவர்களும், துணை ஆளுநராக சேலம் ஏர்போர்ட் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A.S. அரவிந்தராஜ் MJF அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா Er. P.S. தங்கவேலு MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2008 - 2009

ஆளுநராக சேலம் ஏர்போர்ட் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A.S. அரவிந்தராஜ் MJF அவர்களும், துணை ஆளுநராக ஈரோடு காவேரி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. கல்யாணசுந்தரம் MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரிமா Er. P.T. சுரேஷ் குமார் MJF அவர்கள் அமைச்சரவைச் செயலராக பணியாற்றினார்.

2009 - 2010

ஆளுநராக ஈரோடு காவேரி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. கல்யாணசுந்தரம் MJF அவர்களும், முதல் துணை ஆளுநராக அயோத்தியாபட்டினம் ரைஸ் சிட்டியைச் சார்ந்த அரிமா S. மணி MJF அவர்களும், இரண்டாம் துணை ஆளுநராக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. D. சண்முகன் PMJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா D. ரவிச்சந்திரன் MJF அவர்கள் பணியாற்றினார்.

324 AB கூட்டு மாவட்டத்தின் முதல் கூட்டு மாவட்டத் தலைவராக சேலம் ஏர்போர்ட் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A.S. அரவிந்தராஜ் MJF அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010 - 2011

ஆளுநராக அயோத்தியாபட்டினம் ரைஸ்சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S. மணி MJF அவர்களும், முதல் துணை ஆளுநராக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. D. சண்முகன் PMJF அவர்களும், இரண்டாம் துணை ஆளுநராக சோழசிராமணி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. P. சந்திரசேகரன் MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக அயோத்தியாப்பட்டிணம் ரைஸ்சிட்டி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. J. அரவிந்தபாபு அவர்கள் பணியாற்றினார்.

2011 - 2012

ஆளுநராக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. D. சண்முகன் PMJF அவர்களும், முதல் துணை ஆளுநராக சோழசிராமணி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. P. சந்திரசேகரன் MJF அவர்களும், இரண்டாம் துணை ஆளுநராக சென்னிமலை அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A.P. சுப்பிரமணியம் PMJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஈரோடு மத்திய அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா K. குமரவேல் MJF அவர்கள் நியமிக்கப்பட்டார்.

2012 - 2013

ஆளுநராக சோழசிராமணி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. P. சந்திரசேகரன் MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக அரிமா. A.P. சுப்பிரமணியம் PMJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக அரிமா D. ரவிச்சந்திரன் MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவை செயலராக குமாரபாளையம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா V. விஜயகுமார் PMJF அவர்கள் பணியாற்றினார்.

2013 - 2014

ஆளுநராக சென்னிமலை அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A.P. சுப்பிரமணியம் PMJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக அரிமா. D. ரவிச்சந்திரன் MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக அரிமா A. சாதிக் பாட்ஷா MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவை செயலராக ஈரோடு கோட்டை அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா P. கருணாநிதி அவர்கள் பணியாற்றினார்.

2014 - 2015

ஆளுநராக ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா D. ரவிச்சந்திரன் MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக சேலம் வடக்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா. A. சாதிக் பாட்ஷா MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக வேலூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா P. மோகன் MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா S. மகேஷ்வரன் அவர்கள் பணியாற்றினார்.

2015 - 2016

ஆளுநராக சேலம் வடக்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா A. சாதிக் பாட்ஷா MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக வேலூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா P. மோகன் MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக ஈரோடு தெற்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த T.A. பூபதி MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக சேலம் வடக்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த P.ஞானசேகர் அவர்கள் பணியாற்றினார்.

2016 - 2017

ஆளுநராக வேலூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா P. மோகன் MJFஅவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக ஈரோடு தெற்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T.A. பூபதி MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக சேலம் கேலக்ஸி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா K. சேகர் MJF அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஈரோடு ஸ்டார் சங்கத்தைச் சார்ந்த அரிமா C.ஜெயதேவன் அவர்கள் பணியாற்றினார்கள்.

ஜப்பானில் உள்ள புகோகா நகரில் நடைபெற்ற பன்னாட்டு மாநாட்டில் ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சார்ந்த முன்னாள் ஆளுநர் அரிமா k. தனபாலன் PMJF பன்னாட்டு இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

2017 - 2018

ஆளுநராக ஈரோடு தெற்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T.A. பூபதி MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக சேலம் கேலக்ஸி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா K. சேகர் MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக குமாரபாளையம் சங்கத்தைச் சார்ந்த அரிமா V. விஜயகுமார் MJF அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஈரோடு தெற்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. பிரபாகரன் MJF அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

2018 - 2019

ஆளுநராக சேலம் கேலக்ஸி அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா K. சேகர் MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக குமாரபாளையம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா V. விஜயகுமார் MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக ஈரோடு வடக்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T. இளங்கோவன் MJF அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக ஆத்தூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா Er. N. வெங்கடேசன் MJF அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

2019 - 2020

ஆளுநராக குமாரபாளையம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா V. விஜயகுமார் MJF அவர்களும், முதலாம் துணை மாவட்ட ஆளுநராக ஈரோடு வடக்கு அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T. இளங்கோவன் MJF அவர்களும், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநராக ஓசூர் இம்பாக்ட் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா T. ரவிவர்மா MJF அவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். அமைச்சரவைச் செயலராக குமாரபாளையம் அரிமா சங்கத்தைச் சார்ந்த அரிமா R. ராஜேந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

Address

33 / 16 B, Chinnamuthu 2nd Street, 2nd Floor, Trust Hospital Back Side, Perundurai Road, Erode, Tamilnadu, India - 638011

Email

lions324b22021@gmail.com